பட்ஜெட் 2025-ல் கல்வி அமைச்சின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்! – ஃபாத்லினா சிடேக் நம்பிக்கை
- Shan Siva
- 10 Oct, 2024
கப்பாளா பத்தாஸ், அக் 10: நாடு தழுவிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதோடு, மேலும் பல முயற்சிகளை வரவிருக்கும் 2025 பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம்
பட்ஜெட் அறிவிக்கப்படும்போது, பல முயற்சிகள்
மற்றும் திட்டங்களுக்கு உகந்த பட்ஜெட்டாக இருக்கும்
என்று நம்புவதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
மோசமான நிலையில்
உள்ள பள்ளிகளின் பிரச்சினை ஆராயப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய
கல்வி மேலாண்மை மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் கூறினார்.
கல்வி அமைச்சு முன்மொழியப்பட்ட
திட்டங்களை சமர்ப்பித்து, பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் கொடுத்திருப்பதாக ஃபத்லினா கூறினார்.
கல்வி முறைக்கான தேவைகளின்
அடிப்படையில் கல்வி அமைச்சின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார் என்று தாம் நம்புவதாக
அவர் தெரிவித்தார்.
எந்தவொரு
மாணவர்களும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக முழு கல்விச்
சூழலை மேம்படுத்துவதே அமைச்சின் தற்போதைய கவனம் என்று ஃபத்லினா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *