ஆசியாவில் தலைசிறந்த நாணயமாக ரிங்கிட் உருவெடுக்கும்
- Tamil Malar (Reporter)
- 10 Nov, 2025
கோலாலம்பூர், நவ.
10-
இன்று அமெரிக்க
டாலருக்கு எதிராக 4.16 வெள்ளி
என்ற 13 மாத உச்ச நிலைக்கு ரிங்கிட்
வலுப்பெற்றது. இதனால், ஆசியாவில்
இரண்டாவது ஆண்டு தலைசிறந்த செயல்திறன் காட்டும் நாணயமாக அது உருவெடுக்கும்
பாதையில் உள்ளது. முஆமலத்
வங்கியின் பொருளாதாரத் தலைவர் டாக்டர் முகமட் அபானிசமிம் அப்துல் ரஷித் கூறுகையில்,
ஆண்டின்
தொடக்கத்திலிருந்து ரிங்கிட் 7.4 சதவீதம்
வலுப்பெற்றுள்ளதாகவும், இது
ஆசிய சந்தைகளில் மிக வலிமையான நாணயமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில்
வட்டி விகிதங்களைக் குறைக்கும் எதிர்பார்ப்பு, ரிங்கிட் உட்பட பி நாணயங்களின் வலிமையை
அதிகரிக்க உதவியுள்ளது என அவர் கூறினார். அமெரிக்காவில் இறக்குமதி வரிகளுக்கான
அதிர்ச்சி அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கியுள்ளன. இதன் விளைவாக,
டிசம்பரில், 2026இல்
அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



