திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்!
- Muthu Kumar
- 21 Sep, 2025
நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான 'திரிஷ்யம்' , 'திரிஷ்யம் 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹிந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில், திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நாளை (செப். 22) கேரளத்தின் தொடுபுழாவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மோகன்லால் மற்றும் மீனா உள்ளிட்டோருக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



