50 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மலேசிய சிலம்பக் கழகத்தின் பதிவு இடைநிறுத்தப்படும் அபாயம்!
- Surendran Sumdraraj
- 23 Nov, 2026
கோலாலம்பூர், நவம்பர் 22 –
டத்தோ வி.எல். காந்தன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, 50 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மலேசிய சிலம்பக் கழகத்தின் பதிவு இடைநிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பில் விளக்கம் கோரி, மலேசிய விளையாட்டு ஆணையம் கழகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விளக்கமளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய விளையாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கை தற்போது சிலம்பத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள கழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மலேசிய சிலம்பக் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் ஏ. விஸ்வலிங்கம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதில் விலாயா மாநில சிலம்பக் கழகத் தலைவர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விஸ்வலிங்கம், கழகத்தின் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடர்ந்தால் அதன் பதிவு இடைநிறுத்தப்படும் நிலை ஏற்படலாம் என எச்சரித்தார்.
மேலும், அனைத்துலக சிலம்பப் போட்டியை நடத்துவதன் மூலம் பெருமளவிலான நிதி திரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து தசாப்தங்களாக மலேசியாவில் சிலம்பக் கலையின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய கழகம், இன்று இத்தகைய சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் இந்நிலையிலிருந்து கழகத்தைக் கடப்பாடு தங்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

