ஜனா விபாவா திட்டம்: பெர்சத்து கணக்கில் 25.3 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 2 –

ஜனா விபாவா திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றதாக அடையாளம் காணப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 25.3 மில்லியன் ரிங்கிட், பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் மீது தொடரப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

வழக்கின் 29-ஆவது அரசுத் தரப்பு சாட்சியான எஸ்.பி.ஆர்.எம். சிறப்பு நடவடிக்கைப் பிரிவு விசாரணை அதிகாரி மசெரி முகமது ஜைனி இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரது சாட்சியத்தின்படி, கே.சி.ஜே. என்ஜினியரிங் சென். பெர்ஹாட், நெப்டுரிஸ் சென். பெர்ஹாட், மாம்போர் சென். பெர்ஹாட் மற்றும் சுத்ராகோம் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் மற்றும் கே.சி.ஜே. நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்மான் யூசோப் ஆகியோருடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் மூலம் அந்தத் தொகை பெர்சத்து கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *