சபாவில் ஆயுதமேந்திய நபர்களா? அது போலியான செய்தி! காவல்துறை அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 16: சபாவில் உள்ள செம்போர்னா மற்றும் லஹாட் டத்து ஆகிய பகுதிகளுக்குள் ஆயுதமேந்திய நபர்கள் குழு ஒன்று நுழைந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் போலியானவை என கிழக்கு சபா பாதுகாப்பு கட்டளைப் பிரிவின்  தளபதி விக்டர் சஞ்சோஸ் தெரிவித்தார்.

மேலும், இரு பகுதிகளிலும் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்தக் கூற்றுக்கள் குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

பரவி வரும் கூற்றுக்கள் போலியானவை, மேலும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தற்போது, ​​நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும், கிழக்கு சபா கடற்பரப்பையும் பாதிக்கக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலையும் கண்டறிய நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று  அவர் கூறினார்.

குறிப்பாக கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள கடற்பரப்புகள் மற்றும் முக்கிய இடங்களில், எப்போதும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கண்காணித்து செயல்படுத்தி வருவதாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த எந்தவொரு தகவலும் மேலதிக நடவடிக்கை மற்றும் உறுதிப்படுத்தலுக்காக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் விக்டர் கூறியதாக FMT செய்தி வெளியிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *