2020 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை 3,847 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்!
- Muthu Kumar
- 17 Oct, 2024
கோலாலம்பூர், அக் 17:
2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 18 வயதுக்குட்பட்ட 3,847 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் 96 சதவீதம் பேர் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன இஸ்மாயில் தெரிவித்தார்.
2020ல் மொத்தம் 792 குழந்தைகளும், 2021ல் மொத்தம் 594 குழந்தைகளும், 2022ல் மொத்தம் 902 குழந்தைகளும், 2023ல் 779 குழந்தைகளும், இந்த ஆண்டு செப்டம்பர் வரை 780 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
சராசரியாக, வருடத்திற்கு 770 வழக்குகள் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு வழக்குகள் உள்ளன.காணாமல் போன 3,847 குழந்தை வழக்குகளில், 96 சதவீதம் அரச மலேசியா காவல்துறையால் (PDRM) வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் துரதிர்ஷ்டவசமாக இறந்துள்ளனர் என்று அமைச்சரின் கேள்வி நேரத்தில் அவர் கூறினார்.
13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காணாமல் போனவர்களில் 54 சதவீதம் பேர் என்றும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 37 சதவீதம் என்றும் அமைச்சர் கூறினார்.
காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் பெண்கள், 74 சதவிகிதம் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் சிறுவர்கள் 26 சதவிகிதம் என்று தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *