15 நிமிடங்களில் ஹாட்ரிக்! 41 வயதிலும் மிரட்டும் ரொனால்டோ – அல் நஸர் அபார வெற்றி!

top-news

ரியாத்:

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில், போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெறும் 15 நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தால் அல் நஸர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் அல் கோலூத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியின் முதல் பாதியில் தலா இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டு ஆட்டம் சமநிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் ரொனால்டோ தனது அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அவர், 72-ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து 81-ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.

41 வயதிலும் ரொனால்டோ வெளிப்படுத்திய இந்த அபார ஆட்டம் கால்பந்து ரசிகர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்