ரொனால்டோ இன்னும் சவூதியில்தான் இருக்கிறார்

top-news

ரியாத், மார்ச் 4-

ஆசிய மேற்குப் பகுதியில் அதிகரித்து வரும் மோதல் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவை விட்டு வெளியேறியதாகப் பரவிய வதந்திகள் உண்மையல்ல என உறுதியாகியுள்ளது.

41 வயதான இந்த போர்த்துகீசிய நட்சத்திர வீரர் தற்போது சவுதி அரேபியாவிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் அவரது தனியார் விமானம் அந்த நாட்டிலிருந்து புறப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அவர் நாட்டை விட்டு சென்றாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், சவுதி கிளப் அல்-நஸர் செவ்வாய்க்கிழமை சமூக ஊடக தளம் X-ல் ரொனால்டோ தனது அணியினருடன் பயிற்சி மையத்தில் இருப்பதை காட்டும் புகைப்படத்தை பகிர்ந்தது. இதன் மூலம் அவர் நாட்டை விட்டு செல்லவில்லை என்பது உறுதியாகி, பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *