ரோஸ்மா மான்சோருக்குத் தீர்ப்பை நிறைவேற்ற நிபந்தனையுடன் இடைக்காலத் தடை
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 12-
லெபனானைச் சேர்ந்த நகை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் SAL-க்கு சாதகமாக வழங்கப்பட்ட RM67.5 மில்லியன் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மான்சோருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.
நீதித்துறை ஆணையர் மரியான் அன்டோனெட் கானி, இன்று முதல் ஒரு மாதத்திற்குள் RM67,461,027.37 தொகையை இரு தரப்பினரின் வழக்கறிஞர்களால் நிர்வகிக்கப்படும் கூட்டு அறங்காவலர் கணக்கில் செலுத்துமாறு ரோஸ்மாவுக்கு உத்தரவிட்டார்.
இரு தரப்பினரின் உரிமைகளையும் சமநிலைப்படுத்துவதற்கு இந்த நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடை பொருத்தமான தீர்வாகும் என நீதித்துறை ஆணையர் தெரிவித்தார்.
இதன் மூலம், நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்ற குளோபல் ராயல்டி நிறுவனத்திற்கு தீர்ப்பின் பலன் உறுதி செய்யப்படுவதுடன், ரோஸ்மாவுக்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையும் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



