குறைந்த விலையில் விபச்சாரம்! - போலீஸார் அதிரடி
- Shan Siva
- 11 Nov, 2024
தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக
நம்பப்படும் உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும்
தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் இம்பி பகுதிகளில், 100 வெள்ளிக்கும் குறைவான
சேவை வழங்குவதாகவும் ,அருகிலுள்ள
ஹோட்டல்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ருஸ்டி இசா
கூறினார்.
இதனை அடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் ஓப்ஸ் நோடா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆணுறைகள்,
3,720 ரிங்கிட் ரொக்கப்பணம், நான்கு கைபேசிகளையும்
கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *