6,646 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கீன நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், நவம்பர் 19: 2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 6,646 மூத்த மற்றும் ஜூனியர் போலீஸ் அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர் என்று தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

ஒரு மூத்த அல்லது இளைய அதிகாரியாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் தவறான செயல்களில் போலீஸ் ஈடுபாடு குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக தம்மைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று குவாந்தான் நகர சபை அளவிலான ஒருமைப்பாடு நாள் கொண்டாட்டம் 2024 உடன் இணைந்து அரசு ஊழியர்களிடையே நேர்மையை வளர்ப்பது என்ற தலைப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *