பணம் செலுத்தாத கணக்குகளுக்கு வெ.100 கட்டணத்துடன் கைது வாரண்ட்- செலாயாங் நகராண்மை கழகம்!
- Muthu Kumar
- 24 Sep, 2024
கோம்பாக், செப் 24-
மொத்த வெ. 10.68 மில்லியன் மதிப்பீட்டு வரியின் நிலுவைத் தொகையில் வெ. 7.7 மில்லியனை செலாயாங் நகராண்மை கழகம் வசூலித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் இரண்டாவது தவணைக்கான பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தது.
பின்னர் 69,966 பணம் செலுத்தாத கணக்குகளுக்கு மதிப்பீட்டு வரி அறிக்கையை எம்பிஎஸ் அனுப்பியதாகவும் அதன் தலைவர் கூறினார்.இந்த அனைத்து மதிப்பீட்டு வரி கணக்கிற்கும் வெ. 20 அதிகமாக வசூலிக்கப்படும். மேலும், இந்த நோட்டீஸ் செப்டம்பர் 30 அன்று காலாவதியாகும்.
அறிக்கை முடிவடைந்த பிறகு இன்னும் பணம் செலுத்தாத கணக்குகளுக்கு வெ.100 கட்டணத்துடன் கைது வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஷாமான் ஜலாலுடின் மெனாரா எம்பிஎஸ் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.
மைஎம்பிஎஸ் அகப்பக்கம் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் வெ. 547,409.78 வருவாய் வசூலை செலாயாங் நகராண்மை கழகம் பதிவு செய்தது என்றும் அவர் தெரிவித்தார். வியாபாரிகள், வணிக உரிமங்கள், கடை வாடகைகள், கட்டட பெர்மிட் ஆகியவற்றிற்குப் பணம் செலுத்தவும் மற்றும் அவற்றை புதுப்பிக்கவும் மைஎம்பிஎஸ் அகப்பக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *