போலீசார் என்று கூறிக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர்கள் கைது!
- Muthu Kumar
- 08 Nov, 2024
(இரா.கோபி)
பெட்டாலிங் ஜெயா, நவ. 8-
சுங்கை பூலோ குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர் என்று சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ சசிகலா தேவி தெரிவித்தார். கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஜராம் கம்போங் புக்கிட் கூச்சிங்கில் உள்ள 10 இடங்களில் சோதனை மேற்கொண்டதில் திருடுபோன மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்த திருட்டுச் சம்பவங்களில் 3 ஆடவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஹோண்டா 6 மோட்டார் சைக்கிள்களும் யமாஹா 2 மோட்டார் சைக்கிள்களும் மற்றொரு யமாஹா மோட்டார் சைக்கிள்களும் 5 எல்சி மோட்டார் சைக்கிள்களும் பல வகையான மோட்டார் சைக்கிள்களின் பாகங்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக 5 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டத்தோ சசிகலா தேவி தெரிவித்தார்.
இந்த கேங் கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் 13 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு 32 ஆயிரம் வெள்ளி என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் போலீசார் என்று கூறிக்கொண்ட 4 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். பெட்டாலிங் ஜெயா போலீசார் கடந்த மாதம் 20 ஆம் தேதி 10 ஆடவர்களை கைது செய்தனர் என்று அவர் தெரிவித்தார். 2 ஆடவர்கள் கொடுத்த புகாரின் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் போலீசார் என்று கூறிக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 25 முதல் 35 வயதுடைய ஆடவர்களை பெட்டாலிங் ஜெயா போலீசார் பெட்டாலிங் ஜெயா சுற்று வட்டாரத்தில் கைது செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வர்களின் மூலம் 10 திருட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டன என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் போலீசார் என்று கூறிக்கொண்டு உங்களிடம் சோதனை மேற்கொண்டால் அவர்களிடம் போலீஸ் அடையாள அட்டையை பார்க்க வேண்டும் என்று தெரிவியுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *