ஃபார்முலா 1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2026 – RTM நேரலையாக ஒளிபரப்பும்: அன்வார்
- Surendran Sumdraraj
- 02 Oct, 2026
கோலாலம்பூர், அக். 2-
ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2026 பந்தயத்தை ரேடியோ டெலிவிஷன் மலேசியா நேரலையாக ஒளிபரப்பும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பந்தயத்தைக் கண்டு ரசிக்க முடியும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரலை ஒளிபரப்பு, நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மலேசியர்களுக்கு சிப்பாங் சர்வதேச பந்தயத் திடலில் (SIC) நடைபெறும் உலகத் தரம் வாய்ந்த பந்தயத்தின் சிலிர்ப்பை உணரும் வாய்ப்பை வழங்கும் என தாம் நம்புவதாக அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், சர்வதேசப் பார்வையாளர்கள் வருகை காரணமாக, மூன்று நாட்களிலும் ஒட்டுமொத்த வருகை 100,000-ஐ எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

