தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல்! 5 மலேசியர்கள் கைது

top-news

கோலாலம்பூர், நவ 17: தாய்லாந்தில் 240 கிலோ மெத்தாம்பெத்தமைன் போதைப்பொருளைக் கடத்தியதாக ஐந்து மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்த 37 மற்றும் 39 வயதுடைய இருவருக்கும் முறையே மூன்று மற்றும் ஒரு போதைப்பொருள் குற்றப் பதிவுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் கும்பலின் பின்னணியில் மலேசியாவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால் இரு நாட்டு காவல்துறையினரும் இணைந்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்