மிரியில் 62 கதவுகள் கொண்ட நீளவீடு தீயில் முழுமையாக அழிந்தது

top-news

மிரி, ஆக. 1-

சரவாக் மாநிலம் மிரி அருகே உள்ள உலு நியா பகுதியில் அமைந்துள்ள சாங்காய் லாமா நீளவீடு நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது.

மொத்தம் 62 கதவுகள் கொண்ட இந்த நீளவீட்டில் தீ விபத்து மாலை சுமார் 6.26 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நீளவீட்டில் தற்போது யாரும் வசிக்காததால் உயிரிழப்போ அல்லது காயமோ எதுவும் ஏற்படவில்லை.

சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேச்சாளர் கூறுகையில், மாலை 6.26 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.

தீ விபத்து நடைபெற்ற இடம் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. முதல் தீயணைப்பு வாகனம் மாலை 6.58 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தபோது, நிரந்தரமற்ற கட்டுமான அமைப்பில் இருந்த 62 கதவுகள் கொண்ட நீளவீடு முழுவதுமாக தீக்கிரையாகி இருந்ததாக அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *