வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!
- Muthu Kumar
- 04 Aug, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் 27 வயதுடைய கேரோலின் லெவிட்டைப் புகழ்ந்த விதம், தற்போது உலகளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான கரோலின் லீவிட், வெள்ளை மாளிகையின் டிரம்பின் ஐந்தாவது பத்திரிகையாளர் செயலாளராகவும், அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல்வராகவும் உள்ளார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய கரோலின் லீவிட், ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, ஒரு சமாதான ஒப்பந்தம் மற்றும் போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்துள்ளார். இந்த செயலுக்கு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக டிரம்பிடம் ஒரு பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கரோலின் லீவிட் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார் என்றும், .அவரது அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும். அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன என்று வர்ணித்தார். அத்துடன், கரோலின் லீவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது என்று கூறினார்.
ட்ரம்பின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அருவறுப்பானவை என்று கூறிவருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவிட்டு ட்ரம்பின் செயலை கண்டித்தும் வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



