மீண்டும் அதிபரானார் டிரம்ப்! ஆதரவாளர்கள் உற்சாகம்!

top-news

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் கிட்டத்திட்ட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 267 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டிரம்புக்கு அதிகமுள்ளது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51.2%, கமலா 47.4% பெற்றுள்ளனர்.

பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளை பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *