வெனிசுலாவை கைப்பற்றிய டிரம்ப்பால் தங்கம் விலையில் ஏற்படப் போகும் மாற்றம்!
- Muthu Kumar
- 04 Jan, 2026
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக உலக அளவில் தங்கம் விலை உயருமா? வெள்ளி விலை உயருமா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் வெனிசுலா மீதான வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் சிறைபிடிப்பு ஆகியவற்றால் எழுந்த புவிசார் அரசியல் பதட்டங்கள், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலையைப் பாதிக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 3 சனிக்கிழமையன்று, வெனிசுலாவை கைப்பற்றியதாக அறிவித்தார். அங்கே பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று கூறியிருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு வெனிசுலாவின் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது இறையாண்மை மீறல் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய புவிசார் அரசியல் பதட்டங்கள் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வெனிசுலாவை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயரும்.. இதனால் அமெரிக்கா பலம் அடையும்.இதன் காரணமாக தங்க மதிப்பு சரியும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
ஆனால் இப்போது இந்த நொடி வரை வெனிசுலா - அமெரிக்கா போர் முடியவில்லை. அதேபோல் வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் பதிலடி கூட கொடுக்கலாம். எனவே அதுவரை தங்கம் வெள்ளியே பாதுகாப்பானது என்று பலரும் கருதும் வாய்ப்புகள் உள்ளன.
உலக பதற்றம் பதட்டங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளிக்கு வரும் நாட்களில் தேவை அதிகரிக்கக்கூடும். இதனால், ஜனவரி 5 திங்கட்கிழமையன்று சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்றம் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அரசியல் வல்லுனர்கள் வெளியிட்ட தகவலின்படி கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கொஞ்சம் சரிவு காணப்பட்டாலும், பணவீக்கம், நாணய பலவீனம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற அடிப்படை காரணிகள் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயரும் .வெனிசுலா போர் காரணமாக தங்கம் விலை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதலால் குறுகிய காலத்தில் தங்கம், அடிப்படை உலோகங்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்கள் ஆகியவற்றின் விலையில் வலுவான முன்னேற்றம் ஏற்படும்.
அமெரிக்கத் தாக்குதல் இப்பகுதியில் புவிசார் அரசியல் பதட்டங்களைத் தூண்டி, நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். இதனால், தங்கம், வெள்ளி, செம்பு, கச்சா எண்ணெய், பெட்ரோல் போன்றவற்றுக்கு ஏற்றமான தொடக்கத்தை கொடுக்கும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



