உக்ரைன் பயணிகள் இரயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: ஓட்டுநர், உதவியாளர் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
கீவ், ஆக. 14 —
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் இன்ஜின் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதில், ரெயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஒடேசா பிராந்தியத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரெயிலின் முன்பகுதியை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் காரணமாக ரெயிலின் இன்ஜின் மற்றும் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.
இந்தத் தாக்குதலில் பணியில் இருந்த ஓட்டுநரும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனினும், ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



