ரஷிய நாடாளுமன்றத் தேர்தல்: புதின் ஆதரவு ‘யுனைடெட் ரஷியா’ கட்சி வெற்றி

top-news

மாஸ்கோ: ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஆதரவான ஆளும் ‘யுனைடெட் ரஷியா’ கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை ரஷிய மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழ் அவையான ஸ்டேட் டுமாவில், யுனைடெட் ரஷியா 355 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சி 57.83 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 தேர்தலில் அக்கட்சி 49.8 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

இந்த வெற்றியின் மூலம் அரசியலமைப்புத் திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான பெரும்பான்மையை யுனைடெட் ரஷியா தொடர்ந்து தக்கவைத்துள்ளது. தேர்தலில் சுமார் 59 சதவீத வாக்குப்பதிவு பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *