உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களைக் களமிறக்க ரஷியா திட்டம் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கீவ், ஜூலை 27-

 உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா மேலும் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ரஷியாவின் வோரோனெஷ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி வெளியிட்ட காணொளி உரையில், ரஷியா மற்றும் வடகொரியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினார். வடகொரியாவிடம் இருந்து கூடுதல் வீரர்களைப் பெற ரஷியா முயற்சி செய்து வருவதாகவும், இதன் மூலம் போரின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், வடகொரியா ரஷியாவுக்குப் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களையும் வழங்கத் தயாராகி வருவதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார். இந்த வகையான ராணுவ ஒத்துழைப்பு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *