உலக நாடுகள் பாகிஸ்தானுடன் நின்றபோது இந்தியாவுடன் நின்றது ரஷியா - ஜெய்சங்கர் புகழாரம்

top-news

புதுடெல்லி, அக். 5 –

உலகின் பல நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த காலகட்டத்தில், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டபோது இந்தியாவுடன் நின்ற நாடு ரஷியா என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற ஜெய்சங்கரிடம், இந்தியா-ரஷியா உறவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவு வரலாற்று ரீதியாக வலுவானது என்றும், அந்த உறவு எதிர்காலத்திலும் தொடர்ந்து வலுப்பெறும் என்றும் கூறினார்.

ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உருவாகின்றன என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், நல்ல வரலாற்றையும், சிரமமான காலகட்டங்களையும் மக்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *