ரஷியா: குண்டு வீச்சு விமானம் விபத்து

top-news

மாஸ்கோ, செப். 30 –

ரஷியாவில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானம் பயிற்சியின்போது தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரஷியாவின் அமூர் மாகாணத்தில் ரஷிய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, அணு ஆயுத வல்லமை கொண்ட டியூ-95 ரக குண்டுவீச்சு விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையில் மோதியதும் விமானம் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரே ஒரு வீரர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *