பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் ஆர்யா மற்றும் அசோக் செல்வன்,தினேஸ்!

top-news

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்கள் பெரிதாக வெல்லாது என்ற எண்ணம் மாறி தற்போது கதைக்காக படங்கள் சூப்பர்ஹிட் அடித்து வருகிறது. அதிலும் கதைக்காக படத்தினை தேர்வு செய்து எடுத்து நடிக்கும் மணிகண்டன் படங்களும் வெற்றி படமாக அமைவது வழக்கமாகி இருக்கிறது.

லவ்வர், குட் நைட் தொடங்கி குடும்பஸ்தன் படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அதன் கதைக்காக ஹிட்டடித்துள்ளது. இதுபோல அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம் லப்பர் பந்து. முதலில் ஹரிஷ் கல்யாண் படமாக வெளியானது.

ஆனால் இப்படத்தில் கெத்து கேரக்டரில் நடித்த தினேஷ் கேரியரே மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அவரை ரசிகர்கள் கெத்து தினேஷ் என்றும் அழைத்து வருகின்றனர். தற்போது இந்த சென்சேஷன் நாயகர்களான கெத்து தினேஷ் மற்றும் மணிகண்டன் தற்போது ஒரே படத்தில் இணைய இருக்கிறார்.

பா.ரஞ்சித்  வேட்டுவம் என்ற படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட இருக்கிறதாம். இதனால் சார்பட்டா இரண்டாம் பாகம் தள்ளிப் போகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அசோக் செல்வனும் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி ஹிட் நடிகர்களை ஒன்றிணைப்பதால் வேட்டுவம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *