முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் - மாரி செல்வராஜ்!

top-news
FREE WEBSITE AD

தற்போது மாரி செல்வராஜ், தனுஷின் டி56 (D56) படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்துவருகிறார். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனுஷின் டி56 படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார்

தனுஷின் டி56 படம் ஒரு பீரியட் ஃபேண்டஸி திரைப்படம்தான். எனது வாழ்க்கையில் முதல் முறையாக அதை முயற்சிக்கப்போகிறேன். இந்த படம் ஒரு ஃபேண்டஸி மற்றும் அரசியல், மேலும் பிரிவினை எங்கு தொடங்கியிருக்கும், அந்த பிரிவினையை அப்போதே ஒருவன் முடித்து வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?, போன்ற விதத்தில் இப்படம் தயாராகவுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் எல்லாமே கலந்து இருக்கும். இந்த பிரிவினை எல்லாமே தொடங்கிய காலகட்டம் என்று ஒன்று இருக்கும், அந்த காலகட்டத்தில் ஒருவன் அதை முடிக்கிறான் என்ற ஃபேண்டஸி போன்ற கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

அதனால் இப்படம் பெரிய உழைப்பை கேட்கும் படமாக இருக்கும், அதனாலதான் ரொம்ப நாள் எடுத்துக்கொண்டது. இப்படம் எடுப்பதே பெரிய முயற்சி, நான் ஒரு 5 படத்தை எடுத்தால்தான் என்னால் இப்படத்தை எடுக்கமுடியும், அப்படிப்பட்ட படம். இப்படத்தின் கதையை சொல்லும்போதே, தனுஷ் சார் என்னிடம் " இப்படத்தை பெருசா பண்ணனும் சார்- னு" சொன்னாரு. அதனால் இப்படத்திற்காக காத்திருந்தோம், பின் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தில் இணைந்தது. நிச்சயமாக எனது வாழ்க்கையில் இந்த டி56 படம் ஒரு பெரிய படமாக இருக்கும்" என அதில் அவர் பேசியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *