எத்தனை தொகுதிகள் முக்கியமல்ல- அதில் வெற்றிபெற வேண்டும்! ஷாபி அப்டால்.

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 4-

கடந்த சபா சட்டமன்றத் தேர்தலில் வாரிசான் போட்டியிட்டு வென்ற அதே தொகுதிகளில்  மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.பதினாறாவது சபா சட்டமன்றத் தேர்தலில் வாரிசான் போட்டியிட்ட 46 தொகுதிகளில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அத்தொகுதிகள் அனைத்திலும் வாரிசான் மீண்டும் போட்டியிடுவது திண்ணம் என்று அவர் கூறினார்.

ஆயினும், சபாவின் அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுமா என்பது பற்றி அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல. அதில் வெற்றிபெற வேண்டியதுதான் முக்கியம் என்றார் அவர். இதர கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கும்  சாத்தியம் பற்றியும் கருத்துரைக்க ஷாபி மறுத்தார். சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

Pemimpin parti Warisan , Shabi Abdal yang telah menang di 23 daripada 46 kawasan yang ditandingkan dalam pilihan raya yang lepas telah mengumumkan bahawa mereka akan bertanding semula di kawasan yang sama di mana mereka menang sebelum ini. Beliau enggan mengulas sama ada akan bertanding di kesemua kawasan mahupun kemungkinan bekerjasama dengan parti lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *