ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

top-news
FREE WEBSITE AD

ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதற்கும், இந்த நாளில் காவிரியை வழிபடுவதற்கும் பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் ஆடிப்பெருக்கு என்ற நாளுக்கு பின்னால் மிகப் பெரிய புராண பின்னணி உள்ளதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. அதிலும் ஆடிப்பெருக்கு மகாபாரதத்துடன் தொடர்புடைய நாள் என சொல்லப்படுகிறது. இதை பெருக்கத்திற்குரிய நாளாக குறிப்பிடுவதற்கும் மகாபாரதமே காரணம் என சொல்லப்படுகிறது. உலகில் தர்மம் பெருக வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படும் திருநாளே ஆடிப்பெருக்கு என சொல்லப்படுகிறது.ஆடிப்பெருக்கு என்பது நீர் நிலைகளை, குறிப்பாக காவிரி அன்னையை வழிபடுவதற்கான நாள் என்றும், சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நாள் என்றும் தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடிப்பெருக்கிற்கு மிகப்பெரிய வரலாற்று, புராண பின்னணி உள்ளது. ஆம். மகாபாரத போர் துவங்கியது ஆடி மாதம் 01 ம் தேதி. இந்த போர் மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது.  

மகாபாரத போர் :

குருச்ஷேத்திரப்போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப் பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப் பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படு தோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப் போர்க் களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார்.

கிருஷ்ணரின் ஆலோசனையின் படி சிகண்டி யை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்கள த்திற்கு அனுப்பினர். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்ப டுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர். 16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். 
கர்ணன் போரில் லட்சக்கணக்கான பாண்டவப் படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப் படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.
18 நாட்கள் நடந்த போர் :

ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறி வைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாக பாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
தர்மம் நிலைநாட்டப்பட்ட நாள் :

குருச்ஷேத்திரப்போரின் இறுதியில் கர்ணனி ன் தேர்ச்சக்கரம் சேற்றில் மாட்டி கொண்டது. கர்ணன் தேரைச் சேற்றில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்களை தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடை யாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18நிலைநாட்டப்பட்டஇந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.


ஆடிப்பெருக்கு;
பெருக்கு என்றால் பெருகுவது  என்று பொருள். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் செழிக்கும். இப்படி தங்கள் வாழ்வை வளப்படுத்தும் காவிரியை கரையோரங்களில் உள்ள மக்கள் சிறப்பிப்பதற்காகவும் நன்றி செலுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட விழா ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகும்.

தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். அதனால்தான்  ஆடி பட்டம் தேடி விதை என்ற சொல்லும் உள்ளது . இந்நாளில் ஆறுகளில் நீராடி பூஜை செய்து விவசாய வேலையை துவங்குவார்கள். இதற்கு புராண கதையும் கூறப்படுகிறது. 

ஆடிப்பெருக்கும் அதன் வரலாறும்..
சுர்வதமன் என்ற அரக்கன் தன்னுடைய கடுமையான தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்தார் .அதனால் மூலம்  என்றும் வெற்றியடையும்   வரத்தை பெற்றிருந்தார். இதனால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்த உலகையை கொண்டு வர வேண்டும் என மக்களை ஆட்டி படைத்தார். தேவர்களையும் சிறையில் அடைத்தார். சுர்வதமனிடம்  சிக்காமல் இந்திரன் மற்றும் வருணன் தப்பிச் சென்றனர்.

ஆனால் வர்ணனையும் அரக்கன் பிடித்து விட்டார் .உன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என்றால் நீ தென் பகுதியில் மழை பொழிய கூடாது என்று கூறினார். அதற்கு வர்ணனும் ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக தென்பகுதியில் நீரின்றி பாலைவனமாக மாறியது இதனைப் பார்த்த அகத்தியர் பிரம்மனை நோக்கி தவம் புரிந்தார் .

பிரம்மன்  சிவனிடம் வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானோ தன்னுடைய தலையில் இருந்த கங்கையின் ஒரு பகுதியை முனிவருக்கு கொடுத்தார். அகத்தியர் தன்னுடைய கமண்டலத்தில் அந்த நீரை அடக்கி தென்பகுதிக்கு வருகிறார். தென்பகுதியைக் காண விநாயகரும் அவரை பின் தொடருகிறார்.

சோர்வால்  அகத்தியர் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருக்கிறார். தென்பகுதி உடனடியாக செழிப்பாக வேண்டும் என எண்ணி விநாயகர் காகம் உருவெடுத்து கமண்டலத்தில் உள்ள நீரை தட்டி விடுகிறார் இதைப் பார்த்து அதிர்ந்த முனிவர் காகத்திற்கு சாபமிட போகிறார் .அப்போது சுய உருவத்தில் விநாயகர் காட்சி தருகிறார். இவ்வாறு விநாயகர் காகமாக மாறி நீரை விரித்ததால் காவிரி என அகத்திய பெயர் சூட்டினார்.

ஆடிப்பெருக்கு நாளானது   ஆன்மீகம் மட்டுமல்லாமல் நன்றி கடன் செலுத்துவதற்கும் உரிய நாளாக உள்ளது. இந்நாளில் பெண்கள் தாலி கயிறு மற்றும்  தாலி சரடு மாற்றி கொள்ளலாம். இந்த நாளில் பெண்கள் ஆற்றில் நீராடி ஆற்றங்கரை ஓரம் காவிரித் தாயை மனதில் வைத்து, பூ பழம், தேங்காய், மஞ்சள் ,காப்பரசி போன்ற மங்களப் பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு செய்து தாலி சரடு மாற்றிக் கொள்வது வழக்கம்.

அவ்வாறு மாற்றிய பிறகு மூன்று அல்லது ஐந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் காவிரி தாயின் ஆசியினை பெற்று திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமணம் ஆனவர்களின் கணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஆடிப்பெருக்கு அன்று எந்த ஒரு செயலை செய்தாலும் காவிரி நீர் போல் பெருக்கெடுத்து பொங்கி வரும். தொட்டது பல மடங்கு பெருகும். எனவே  இந்தப் புண்ணிய காலத்தில் பூமித்தாயையும் காவிரியையும் வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும்.

:- லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *