கட்சிகள் வெவ்வேறானாலும்! இலக்கு ஒன்றுதான்! - துணையமைச்சர் க.சரஸ்வதி!

top-news
FREE WEBSITE AD

அடிப்படையில் வழக்கறிஞர்களாக இருக்கும் மதியழகன், குலசேகரன், தாம் உட்பட வெவ்வேறு கட்சிகளின் பின்னணியைக் கொண்டிருந்தாலும், இந்திய சமூகத்தின் மீட்சியும், தமிழ் மொழியின் மேம்பாடும் தான் எங்களின் முதன்மை இலக்கு என துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் பின்னணியைச் சேர்ந்த மதியழகன், டி.ஏ.பி கட்சியின் தூண் துணையமைச்சர் எம். குலசேகரன், பி.கே.ஆர் கட்சியில் தாம் என வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் நாங்கள் இயங்கினாலும், எங்களின் அறிமுகமும் தொடக்கமும் வழக்கறிஞர்களாக என துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நினைவுக் கூர்ந்தார்.

மதியழகன் அவர்களால் வழக்கறிஞராகப் பல்வேறு படிப்பினைகளைத் தாம் கற்றதாகவும் வழக்கின் சாணக்கியத்துவத்தையும் அதன் முறைமைகளையும் தாம்  கற்றதில் முக்கிய பங்கு மதியழகன் அவர்களுக்கு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் தொடக்கத்தில் தன்னை அரசியல் மேடைகளில் அறிமுகப்படுத்தியதும், மேடைகளில் அங்கீகரித்ததும் எம்.குலசேகரன் அவர்கள் என்பதை நன்றி மறவாது துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நினைவுக் கூர்ந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *