ம.இ.கா சரவணின் குடும்பச் சொத்து விவரங்களை அறிவிக்க SPRM நோட்டிஸ்! 29 செப்டம்பர் நீதிமன்ற விசாரணை!

top-news

செப்டம்பர் 25

ம.இ.காவின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான M.SARAVANAN தன் சொத்துகளையும் தன் மனைவி மற்றும் தன் 3 பிள்ளைகளின் பெயரில் உள்ள சொத்துகளையும் அறிவிக்கும்படி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நோட்டிஸ் வழங்கவிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Dato' Sri Abdul Halim  Aman தெரிவித்தார். இந்த நோட்டிஸ் சரவணனிடம் வரும் திங்கட் கிழமை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் நேரடியாக வழங்கப்படும் என SPRM தலைவர் Dato' Sri Abdul Halim  Aman தெரிவித்தார்.

சரவணனின் குழந்தை லண்டனில் படித்துக் கொண்டிருப்பதால் 30 நாள்களுக்குள் முன்னாள் அமைச்சரான சரவணன் தனது குடும்பச் சொத்துகளை அறிவிக்க இந்த 30 நாள்கள் கால அவகாசம் போதுமானதாக இருக்கும் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Dato' Sri Abdul Halim  Aman தெரிவித்தார். சரணனின் இந்த சொத்து விவரங்கள் குறித்தான விவரங்கள் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் இருக்கும் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Dato' Sri Abdul Halim  Aman தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 28, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணனின் மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் குற்றச்சாட்டை முன்வைத்தது. 2021-இல் மனிதவள அமைச்சராக இருந்த சரவணன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் சுமார் 11 லட்சத்து 97 ஆயிரம் (RM 1.097MILLION) ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த போது TYKB Engineering Sdn Bhd எனும் பெருநிறுவனத்திற்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒப்புதல் அளிக்க Vectica Resources Sdn Bhd எனும் மற்றொரு நிறுவனத்தின் தலைமை மேலாளர் Tan Teck Lim இடம், Syed Amirul Syed Ahmad மூலமாக இந்த 11 லட்சத்து 97 ஆயிரம் (RM 1.097MILLION) ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த 28 ஆகஸ்ட் இந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் என வாதிட்ட ம.இ.காவின் துணைத் தலைவர் சரவணன் RM450,000 பிணைத் தொகையில் வெளியேறினாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவொரு தொடர்பும் வைத்திருக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 29 மீண்டும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *