துபாயைச் சேர்ந்த செக்யூரிட்டி நிறுவனம் விஜய்க்கும், த.வெ.க மாநாட்டிற்கும் பாதுகாப்பு!

top-news

துபாயைச் சேர்ந்த ஜெண்டர் செக்யூரிட்டி சர்வீஸ் என்ற நிறுவனம், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடக்கும் திடலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இந்த மாநாட்டை நடத்தி கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனம் தான் இந்த ஜெண்டர் செக்யூரிட்டி சர்வீஸ்.

இந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை பாதுகாக்கும் பொறுப்பை விஜய் ஒப்படைத்துள்ளதாகவும், மாநாட்டில் எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதற்கான விஜய்யின் மாஸ்டர் பிளான் தான் இது என்றும் கூறப்படுகிறது.

ஜெண்டர் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் பவுன்சர்கள் தற்போது மாநாட்டு திடலில் முழுமையான பாதுகாப்பை கொண்டு வந்திருப்பதாகவும், விஜய்க்கும் அவர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், ஒரு அரசியல் கட்சி மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சிக்கு பாடம் எடுக்கும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது என்று இந்த மாநாட்டு ஏற்பாடுகளை பார்த்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *