200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிச் சுற்றில் அசீம் தோல்வி!
- Muthu Kumar
- 26 Jul, 2025
பெர்லின், ஜூலை 26-
மலேசியாவின் முன்னணி வேக ஓட்ட வீரர் முகமது அம் பஹ்மி, 2025 ரைன்-ரூர் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் நடைபெற்ற ஆண்கள் 200 மீட்டர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதைத் தவறவிட்டார்.
அசீம், அரையிறுதி சுற்றில் 21.51 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். இது முதல் சுற்றில் அவர் பதிவு செய்த 21.26 வினாடிகளை விட மெதுவாக உள்ளது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் 100 மீட்டர் சாம்பியன் பயாண்டா வலாசா. 20.76 வினாடிகளில் முதலிடத்தைப் பிடித்து சிறப்பாக விளங்கினார்.
ஸ்பெயினின் ஆத்ரியா மெதேரோ 20.77 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும். ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் இயூஸ் 20.85 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அசீம், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் ஓய்வின்றி 100 மீட்டர் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்றதால் ஏற்பட்ட களைப்பு தனது செயல்பாட்டை பாதித்ததாக ஒப்புக்கொண்டார்.
முகமது அசீம், மலேசியாவின் முன்னணி வேக ஓட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தத் தோல்வி அவருக்கு ஏமாற்றமளித்தாலும், அவரது உறுதியும் திறமையும் இனிவரும் போட்டிகளில் மீண்டும் பிரகாசிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



