சமூக வலைதள கருத்து மோதலுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த அந்தோணி லோக் – ஓன் ஹாபிஸ்

top-news

கூலாய், ஜூன் 16 –

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துப் பரிமாற்றம் மற்றும் விமர்சனங்களால் கவனம் ஈர்த்திருந்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காசி, இன்று கூலாய் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தெற்கு ஷட்டில் சேவை (Shuttle Selatan) தொடக்க விழாவில் நேருக்கு நேர் சந்தித்தனர்.

போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு நண்பகல் 12.45 மணியளவில் அந்தோணி லோக் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து ஓன் ஹாபிஸ் காசியும் நிகழ்விடத்திற்கு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் மாநில பொதுப்பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது பாஸ்லி முகமது சாலே மற்றும் டிஏபி கட்சியின் பல முக்கிய தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

சமூக வலைதளங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவியிருந்த போதிலும், இரு தலைவர்களும் நிகழ்வில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, நட்புறவுடன் உரையாடிய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *