செர்பியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அதிநவீன ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை அனுப்பிய புதின்
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
பெல்கிரேடு: ஐரோப்பிய நாடான செர்பியாவில் அடர்ந்த வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. பலத்த காற்று வீசுவதால் தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் செர்பியாவுக்கு உதவ ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பேரிடர் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் ரஷியாவின் அதிநவீன ஐஎல்-76 கனரக ‘வாட்டர் பாம்பர்’ விமானம் செர்பியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐஎல்-76 விமானம் மிகப்பெரிய அளவில் தண்ணீரை எடுத்துச் சென்று, வானில் இருந்து தீப்பகுதிகளில் கொட்டும் திறன் கொண்டது. ஒரே முறையில் சுமார் 42 டன் தண்ணீரை தீப்பிழம்புகள் மீது வாரி இறைத்து தீயை கட்டுப்படுத்தும் திறன் இந்த விமானத்திற்கு உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



