புல்ஹெமை வீழ்த்தியது மான்சஸ்டர் யுனைடெட்

top-news

மான்செஸ்டர், பிப். 2-

இடைக்கால நிர்வாகி மைக்கல் காரிக் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மீண்டெழும் பயணம் தொடர்ந்து வருகிறது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில், ஓல்டு டிராபோர்டில் இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் புல்ஹெம் அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ரெட் டெவில்ஸ் அணி ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கியது.

இந்த ஆட்டத்தின் நாயகனாக ஸ்லோவேனிய முன்னணி வீரர் பெஞ்சமின் செஸ்கோ மின்னினார். ஆட்ட நேர முடிவை எட்டிய பின்னர், கூடுதல் நேரத்தின் நான்காவது நிமிடத்தில் அவர் அடித்த கோல், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வெற்றியை உறுதி செய்ததோடு, மைதானம் முழுவதும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்தை எழுப்பியது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. மான்செஸ்டர் யுனைடெட் இரண்டு முறை முன்னிலை பெற்றபோதும், புல்ஹெம் அணி விடாமல் சமநிலையை ஏற்படுத்தியது. இதனால் ஆட்டம் கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீடித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *