பிரான்சில் பயங்கர காட்டுத்தீ: 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்
- Surendran Sumdraraj
- 15 Aug, 2026
பாரீஸ், ஆக. 15 —
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக, உயிருக்கு அஞ்சிய 525 கிராம மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லேண்டஸ் மாகாணத்தில் உள்ள லக்லான் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீ சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவுக்கு பரவியுள்ள நிலையில், அது குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் சென்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த 525 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



