பிரபல பாப் பாடகர் லியாம் பெய்னின் மரணம் விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா?

top-news

உலகளவில் மிகவும் பல பாப் இசைக்குழுக்கள் இருந்தாலும் அதில் ஒன் டைரக்‌ஷன் எனப்படும் பாப் இசைக்குழு மிகவும் பிரபலம் ஆகும். இவர்களை சுருக்கமாக 1டி என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.

லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் என 5 பேர் கொண்ட இந்த குழுவில் மிகவும் முக்கியமானவராக திகழ்பவர் லியாம் பெய்ன். இவருக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது அந்த குழுவில் இருந்து விலகிவிட்டார். ஆனாலும், இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் கடந்த 30ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு தனது காதலி கேத் கேசிடியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவரது காதலி கடந்த 14ம் தேதியே அர்ஜெண்டினாவில் இருந்து புறப்பட்ட நிலையில், அர்ஜெண்டினாவில் உள்ள போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள காசாசுர் பலேர்மோ ஹோட்டலில் 3வது மாடியில் உள்ள அறையில் லியாம் பெய்ன் மட்டும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், இவர் தனது அறையில் இருந்தபோது பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்ன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 31 வயதே ஆன இளம் பாடகர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியாம் பெய்னின் மரணத்தில் சிலர் சந்தேகம் எழுப்பி வரும் சூழலில், இது விபத்தா? அல்ல திட்டமிட்டு நடைபெற்றதா? என்று அந்த நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த ஹோட்டலில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில் லியாம் பெய்னின் முன்னாள் காதலி மாயா ஹென்றி அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். லியாம் பெய்னின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *