இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படம்!

top-news

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, மும்பையின் கோரேகான் பகுதியில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஷாருக்கான் பங்கேற்கும் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இடம்பெறும் புதிய பாடல் ஒன்றையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான படப்பிடிப்பு, சண்டைக் காட்சிகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘கிங்’ திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பிரமாண்டமாக உருவாகி வருவதால், ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *