பாஸ் பெரிகாத்தானிலிருந்து வெளியேற வேண்டும்! - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் ஆவேசம்

top-news

கோலாலம்பூர், ஜுன் 19: பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசல் இஸ்மாயில் அஜீஸ், பாஸ் கட்சியானது பெரிகாத்தான் நேஷனல்  கூட்டணியிலிருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது ஒரு புதிய அரசியல் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முவாஃபகாட் நேஷனல் கூட்டணியின் கீழ் அம்னோவுடன் கூட்டணி அமைப்பதையோ அல்லது பார்ட்டி வவாசான் கட்சியை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணியை அமைப்பதையோ பாஸ் கட்சி பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பாஸ் கட்சி வெளியேறி, தனக்கென ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும். ஏனெனில், அதன் செயல்பாடுகள் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் நிலைத்த்தன்மையையும் நற்பெயரையும் அதிகளவில் பாதிக்கின்றன, என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் கட்சியானது, கூட்டணிக்கு ஒரு சொத்தாக இருப்பதை விட ஒரு சுமையாகவே மாறிவிட்டது என்று அவர் கூறினார். இதற்குக் காரணமாக, அதன் அர்ப்பணிப்பு இல்லாமை, முடிவெடுப்பதில் தாமதம், மற்றும் பெரிகாத்தான் நேஷனல்  கூட்டணியின் அரசியல் நலன்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிகாத்தான் கூட்டணியைக் காப்பாற்ற, பாஸ் கட்சி தானாக முன்வந்து வெளியேறி, தனது சொந்த சின்னத்தையும் இலச்சினையையும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி தனது அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு, அடுத்த பொதுத் தேர்தலுக்குச் சிறப்பாகத் தயாராக முடியும் என்று அவர் கூறினார்.

கூட்டணியின் தொடர்ச்சியையும் அதன் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக, இக்கத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் (IPR) உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து பெர்சாத்து கட்சி தொடர்ந்து PN-ஐ வழிநடத்த வேண்டும் என்று துன் ஃபைசால் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *