“தாபுங் ஹாஜி, பெல்டா விசாரணைகள் வெளிப்படையாகவும் விரைவாகவும் நடைபெறும்” – அன்வார்

top-news
FREE WEBSITE AD

பாங்கி: மலேசியாவின் தாபுங் ஹாஜி (TH) மற்றும் பெடரல் நில மேம்பாட்டு ஆணையமான பெல்டா (FELDA) தொடர்பான விசாரணைகள் வெளிப்படையாகவும் விரைவாகவும் நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பாங்கியில் நடைபெற்ற பெல்டா உயர் நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முழுமையான உண்மைகள் கண்டறியப்பட்டு, தவறிழைத்தவர்கள் மீது கட்சி பேதமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

“பிரச்சினைகள் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் அமர்ந்து அறிக்கைகளை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அன்வார் வலியுறுத்தினார்.

TH மற்றும் பெல்டாவில் கண்டறியப்படும் நிர்வாகக் குறைபாடுகள் நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்படக் கூடாது என்றும், பிரச்சினைகள் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *