அணியை வலுப்படுத்த செபாஸ்டியன் அவஞ்சினியை இறக்குமதி வீரராக NSFC ஒப்பந்தம் செய்தது!

top-news

சிரம்பான், செப். 23-
2024-2025 லீக் பருவத்தில் தங்களின் அணியை வலுப்படுத்த, செபாஸ்டியன் அவஞ்சினியை புதிய இறக்குமதி வீரராக ஒப்பந்தம் செய்வதாக நெகிரி செம்பிலான் அணியான என்எஸ்எஃப்சி அறிவித்துள்ளது29 வயதான அவர் 2023 பருவத்தில் கோலாலம்பூர் அணியில் இருந்ததோடு 31 போட்டிகளில் விளையாடி இரண்டு கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

என்எஸ்எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கே. நந்தகுமார் கூறுகையில், செபாஸ்டியன் அவஞ்சினியின் வருகை அணிக்கு சிறந்த உத்வேகத்தை தரும் என்றும் சிறந்த செயல்திறனை அணிக்காக அவர் வழங்குவார் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.திறன்மிக்க அனுபவங்களையும் திறமைகளையும் களத்தில் அவர் காட்டுவதோடு அணியை மேலும் வலுப்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதோடு, நிச்சயம் பயிற்சியாளர்கள் அவரின் விளையாட்டு முறைக்கு ஏற்ப உதவுவோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *