விஜய் சேதுபதி ஜெயிலர் 2 படத்தின் வில்லனா?
- Muthu Kumar
- 26 Nov, 2025
நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டு வருகிறார். இத்தனை வயதிலும் சற்றும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து படங்களில் பிசியகா நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
அதன்படி முன்னதாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பான் இந்திய நடிகர்கள் பலர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது சினிமா வட்டாரங்களில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக அவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



