நேபாள வெள்ளப்பெருக்கு எதிரொலி: சிக்கிமில் 16 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தம்

top-news
FREE WEBSITE AD

காங்டாக், செப். 2 –

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் அதிக ஆபத்துள்ள 16 பனிப்பாறை ஏரிகளை கண்காணிக்க சென்சார்கள், தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றில் 16 ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 13 ஏரிகள் வடக்கு சிக்கிமிலும், 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் அமைந்துள்ளன.

இந்த ஏரிகளின் நீர்மட்டம் மற்றும் நீரின் அளவில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக பெரும்பாலான பகுதிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு சிக்கிமில் கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்மட்டம் திடீரென அதிகரித்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கும் வகையில் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *