விம்பல்டன் பட்டத்தைத் தக்க வைத்தார் Jannik Sinner
- Surendran Sumdraraj
- 13 Jul, 2026
லண்டன், ஜூலை 13-
Wimbledon டென்னிஸ் தொடரில் Jannik Sinner தனது பட்டத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான Alexander Zverev-வை நான்கு செட்களில் வீழ்த்தி Sinner சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முதல் நிலை வீரரான Sinner, முதல் செட்டை இழந்தபோதும் மனம் தளராமல் மீண்டு வந்தார்.
மைய அரங்கில் மூன்று மணி நேரம் 46 நிமிடங்கள் நீடித்த கடுமையான போட்டியில், அவர் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் Zverev-வை தோற்கடித்தார்.
இந்த வெற்றி, 24 வயதான இத்தாலி வீரரான Sinner-க்கு ஐந்தாவது Grand Slam பட்டமாக அமைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



