இந்தியன் வெல்ஸ் ATP மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார் யானிக் சின்னர்

top-news

அமெரிக்கா, மார்ச் 16-

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான யானிக் சின்னர், டேனியல் மெட்வெடெவை 7-6 (8/6), 7-6 (7/4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி ATP மாஸ்டர்ஸ் 1000 இந்தியன் வெல்ஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதிகாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில், நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சின்னர், மெட்வெடெவுக்கு எதிராக கடுமையான போட்டியில் வெற்றி பெற்றார். இது 2026 ஆம் ஆண்டுக்கான அவரது முதல் கோப்பையாகும்.

இரண்டாவது செட்டின் டை-பிரேக்கில் 0-4 என்ற நிலையில் பின்தங்கியிருந்த போதிலும், சின்னர் சிறப்பான மீள்வெற்றி பெற்று போட்டியைக் கைப்பற்றினார்.

ரஷ்யாவை சேர்ந்த மெட்வெடெவ் கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், ATP சுற்றுப்போட்டிகளில் தொடர்ந்து ஒன்பது வெற்றிகளைப் பெற்ற சிறந்த நிலைப்பாட்டில் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.

அந்த வெற்றி தொடரில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை அரையிறுதியில் வீழ்த்தியதும் அடங்கும். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *