சின்க்பீல்டு கோப்பை செஸ்: இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-ஆவது இடம்
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா 2-ஆவது இடம் பிடித்தார். இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவிடம் டைபிரேக்கரில் தோல்வியடைந்ததால், பிரக்ஞானந்தாவின் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
9 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் ஆட்டங்களின் முடிவில் பிரக்ஞானந்தாவும் வெஸ்லி சோவும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
முதலில் நடைபெற்ற இரண்டு ரேபிட் ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆர்மகெடான் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வெஸ்லி சோ, பிரக்ஞானந்தாவுக்கு எதிராக டிராவை தக்கவைத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்லி சோ தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 3-ஆவது முறையாகவும் சின்க்பீல்டு கோப்பையை வென்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



