கோலாலம்பூரில் 111 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news

அக்தோபர் 20,

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் குறிவைத்து கோலாலம்பூர் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 111 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்குக் கோலாலம்பூர் JALAN AMPANG சாலையில் போதைப்பொருள் தடுப்பு ஆணையம், போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1,635 வாகனங்களை சோதனை செய்ததாக கோலாலம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 
  இச்சோதனை நடவடிக்கையில் சட்ட விரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 111 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 16 வயதுக்கும் குறைவான இளம் மோட்டார் சைக்கிளோட்டிகளையும் தடுத்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு அவர்களின் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *