கமல் தயாரிப்பில் முருகனாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

top-news
FREE WEBSITE AD

பராசக்தி படத்தில் தமிழ் மொழியை காக்க போராடும் செழியனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், அமரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங்காக சிவகார்த்திகேயன் மாறி வரும் நிலையில், தொடர்ந்து அவரும் பெரிய படங்களை கையில் எடுத்து துணிச்சலாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் அஜித் குமார் படங்களின் பாக்ஸ் ஆபீஸையே பின்னுக்குத் தள்ளி 300 கோடி வசூல் செய்து அவரை முன்னனி நடிகர்களுக்கு இணையாக நகர்த்தி சென்றது.

மதராஸி, பராசக்தி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து 100 கோடி வசூல் நாயகனாகவே சிவகார்த்திகேயனை நிலையாக வைத்துள்ள நிலையில், இன்னொரு பெரிய படம் வந்தால் அவரது பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சே தெலுங்கு திரையுலகம் முருகன் படத்தை எடுக்கப் போறாங்களே என திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முருகன் கதையை படமாக்கப் போவதாக வெளியான தகவல்கள் கோலிவுட்டை கதிகலங்க செய்தது. அல்லு அர்ஜுன் அல்லது ஜூனியர் என்டிஆர் என இருவரில் ஒருவர் முருகனாக நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் முருகனாக நடிக்கப் போகிறாரா? என்கிற எதிர்பார்ப்பு கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பால் எழுந்துள்ளது.

கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் அதிகபட்சமாக 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய லாபத்தை ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஈட்டித் தந்தது. இந்நிலையில், ஒன்மோர் டைம் என கமல் ஹாஷ்டேக் போட்டு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக கமல் பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் முருகனாக நடிக்கப் போகிறாரா? அல்லது தமிழ் மன்னனாக நடிக்கப் போகிறாரா? அது வேலா அல்லது ஈட்டியா என பல விவாதங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *