எத்தனை மாணவர்கள் இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது! துணை அமைச்சர் TEO NIE CHING உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 11 Nov, 2026
நவம்பர் 11,
பள்ளிகளில் குறைந்த பட்சம் மாணவர்கள் இல்லை எனில் அப்பள்ளியை மூடுவதற்கு அவசியம் இல்லை என தொடர்பு துறை துணை அமைச்சர் TEO NIE CHING உறுதி அளித்தார். எத்தனை மாணவர்கள் இருந்தாலும் அப்பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என kulai நாடாளுமன்ற உறுப்பிநரான அவர் தெரிவித்துள்ளார். Kulai மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களைப் பார்வையிட்ட துணை அமைச்சர் TEO NIE CHING அடுத்த ஆண்டு புதிய கட்டிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.
Kulai Besar தோட்டத் தமிழ்பள்ளியில் அமைக்கப்படும் 3 மாடிக் கட்டிடத்திற்கு கல்வி அமைச்சும் துணை அமைச்சும் இணைந்து நிதி வழங்கியிருப்பதாகவும் KULAI BESAR தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சுமார் 4.3 மில்லியன் மதிப்பில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் தொடர்புர் துறை துணை அமைச்சர் TEO NIE CHING தெரிவித்தார்.
Kulai நாடாளுமன்றத்தில் உள்ள 4 தமிழ்ப்பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சு, நிதி அமைச்சு, kulai நாடாளுமன்றத்தின் சிறப்பு நிதி என மொத்தம் 584,757 ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பதாக Kulai நாடாளுமன்ற உறுப்பினர் TEO NIE CHING தெரிவித்தார்.
Kulai BESAR தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு RM224,828 ரிங்கிட்டும், Kulai Oil Palm தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு RM 220,009 ரிங்கிட்டும், Kelan தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு RM 76,114 ரிங்கிட்டும் , sedenak தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு RM 63,776 ரிங்கிட்டும் வழங்கப்பட்டிருப்பதாக TEO NIE CHING தெரிவித்தார்.
நமது பிள்ளைகள் தரமாகவும் சிறந்த சூழ்நிலையில் கல்விக் கற்பதை Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான MADANI அரசாங்கம் உறுதி செய்யும் என TEO NIE CHING தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

